தொடரும் கலவரம்: பிரதமர், உள்துறை அமைச்சருடன் காஷ்மீர் முதல்வர் சந்திப்பு!

ஸ்ரீநகர்,

ம்மு-காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோரை சந்தித்து பேசினார்.

அப்போது, ஜம்மு – காஷ்மீர் மீது மத்திய அரசுக்கு அதிக அக்கறை தேவை என்று வலியுறுத்தினார்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி, இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து மாநில சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நடந்துவரும் கலவரங்களால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவி வருகிறது. பாதுகாப்பு படை வீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.   இந்நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பிரதமர் நரேந்திர மோடியும் மாநில முதல்வர் மெஹபூபா விரிவாக ஆலோசித்தனர்.

பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது. இந்த சந்திப்பின் போது காஷ்மீர் வன்முறை, அண்மையில் நடந்த இடைத் தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் கடுமையாக சரிந்தது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மெபூபா, காஷ்மீர் பிரச்சினையில் வாஜ்பாயின் கொள்கையை கடைபிடிக்கப் போவதாக பிரதமர் மோடி கூறியதாகவும், காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரே தீர்வு சமரசம் தான் என்றும், மத்திய அரசு மிகுந்த அக்கறையுடன் செயல்பட வேண்டும். நெருக்கடியான இத்தருணத்தில் பேச்சுவார்த்தைதவிர வேறு வழியில்லை என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கையும் சந்தித்து பேசினார்.