காஷ்மீர் : முதல்வரின் சகோதரருக்கு அமைச்சர் பதவி

ம்மு

ம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபாவின் சகோதரர் தசாதுக் ஹுசைன் முஃப்தி அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஆளும் கட்சியான மக்கள் குடியரசுக் கட்சியின் அமைப்பாளர் மறைந்த முஃப்தி முகமது சையத்.  இவர் மகள் மெகபூபா முஃப்தி தற்போது முதல்வராக இருந்து வருகிறார்.  மெகபூபாவின் சகோதரர் தசாதுக் கடந்த ஜனவரி மாதம் ஏழாம் தேதி மக்கள் குடியரசுக் கட்சியின் உறுப்பினராக இணைந்தார்.

அதன் பின்பு விக்ரமாதித்ய சிங் என்னும் மேல்சபை உறுப்பினர் ராஜினாமா செய்ததால்  ஜம்மு காஷ்மீர் ஆளுனர் வோரா அந்த இடத்தில் தசாதுக்கை உறுப்பினராக நியமனம் செய்தார்.   அதை தொடர்ந்து    தற்போது அவர் மெகபூபாவின் அமைச்சரவையில் சேர்க்கப் பட்டுள்ளார்.  அவருக்கும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு அமைச்சரான ஜாவேத் முஸ்தஃபா மிர் ஆகிய இருவரும் இன்று பதவி ஏற்றுக் கொண்டனர்.