பிரிவினைவாதிகளை நாம் ஏன் இன்னுமும் காக்க வேண்டும் : காஷ்மீர் டிஜிபி

ஸ்ரீநகர்

பிரிவினைவாதிகளை நாம் ஏன் இன்னுமும் காக்க வேண்டும் : காஷ்மீர் டிஜிபி

நம்மிடம் இரக்கம் காட்டாத பிரிவினைவாதிகளை நாம் ஏன் இன்னுமும் காக்க வேண்டும் என சினத்துடன் கேட்டிருக்கிறார் காஷ்மீர் டிஜிபி சேஷ் பால் வைத்.

காஷ்மீரில் மசுதிக்கு மிக அருகிலேயே ஒரு காவல் அதிகாரியை கல்லால் அடித்து பிரிவினைவாதிகள் கொன்றது தெரிந்ததே.

அது பற்றி காஷ்மீர் டிஜிபி சேஷ் பால் வைத் செய்தியாளர்கள் இடம் தெரிவித்ததாவது

”நம்மைப் போன்ற போலீசார் காஷ்மீரின் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கிறோம்.   அதில் பிரிவினைவாதிகளும் அடங்குவார்கள்.   ஆனால் அந்த பிரிவினை வாதிகளுக்கு சிறிதும் நன்றியோ, ஈவிரக்கமோ இல்லை.  நமது அதிகாரிகளில் ஒருவரையே கொன்றுள்ளனர்.  இனியும் இவர்களை நாம் பாதுகாக்க வேண்டுமா?    அவர்கள் மேலும் மேலும் தீவிரவாதிகள் குழுவுக்கு ஆள் சேர்த்துக் கொண்டே போகின்றனர்.  இதெல்லாம் சகிக்கக்கூடியது அல்ல.   இனி ராணுவத்துடன் சேர்ந்து நாமும் பிரிவினைவாதிகளையும், அவர்களின் தலைமையையும் வேரறுக்க வேண்டும்”

இவ்வாறு கூறி அவர் தன் சினஹ்தை வெளிப்படுத்தினார் .