காஷ்மீர் கல்வீச்சில் காயமடைந்தவர்ளுக்கு சிகிச்சை அளித்த டாக்டரின் மகள் பலி

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் புல்வாமா மாவட்டம் தமுனா கிராமத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டான்.

பாதுகாப்பு படையினருக்கு எதிராக பொது மக்களில் சிலர் கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் காயமடைந்தவர்கள் மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்துல் கனி கான் என்ற மருத்துவர் சிகிச்சை அளித்தார். பணி முடித்து வீடு திரும்பிய அவருக்கு மருத்துவமனையில் இருந்து மீண்டும் அழைப்பு வந்துள்ளது.

அங்கே சென்றபோது டாக்டர் அப்துல் அனி கான் அதிர்ச்சியடைந்தார். அவரது மகள் பைசன் அகமது கான் (வயது 16) கல்வீச்சு தாக்குதலுக்கு ஆளாகி இறந்திருந்தார். இதை கண்டு கதறி அழுத டாக்டரை அருகில் இருந்தவர்கள் தேற்றினர்.