காஷ்மீர் பாஜக அமைச்சரின் புதிய அரசியல் அல்லாத அரசியல் அமைப்பு

ம்மு

காஷ்மீர் மாநில பாஜக முன்னாள் அமைச்சர் லால்சிங் ஒரு அரசியல் இல்லாத அமைப்பை அரசியல் நோக்கத்தோடு தொடங்கி உள்ளார்.

காஷ்மீர் மாநில அமைச்சரவையில் பாஜக சார்பில் அமைச்சராக இருந்தவர் லால்சிங்.   இவருக்கு ஜம்மு, கத்துவா, சம்பா, ரியாசி மற்றும் உதாம்பூர் மாவட்டங்களில் நல்ல செல்வாக்கு உள்ளது.   இதனால் பாஜக சென்ற தேர்தலில் இந்தப் பகுதிகளில் பல தொகுதிகளை வென்றது.   இவர் உதாம்பூர் தொகுதியில் இருந்து மூன்று முறை வென்றவர் ஆவார்.

லால் சிங் நேற்று ஒரு அரசியல் சார்பற்ற பொது  அமைப்பை தொடங்கி உள்ளார்.    அந்த அமைப்புக்கு டோக்ரா சுவபிமான் சங்கதன் என பெயர் இட்டுள்ளார்.    டோக்ரா என்பது அவருடைய சாதி ஆகும்.   இது அரசியல் சார்பற்ற அமைப்பு என அவர் கூறினாலும்  இந்த அமைப்பின் கொள்கைகள் அரசியல் நோக்கத்துடன் காணப்படுகின்றனர்.   இதை ஒட்டி லால்சிங் விரைவில் பாஜக வில் இருந்து விலகுவார் என மக்களால் கூறப்படுகிறது.

லால்சிங், “காஷ்மீர் மாநிலத்தில் சிறுபான்மையினராக உள்ள டோக்ரா சமூகத்தின் முன்னேற்றத்துக்காக இந்த அமைப்பு பாடுபடும்   பல வருடங்களாக இந்த அமைப்பு ஆட்சியாளர்களால் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தப் படுகிறது.   மத்திய காஷ்மீரை சேர்ந்த அரசியல்வாதிகளும் அரசும் ஜம்மு மற்றும் அதன் மக்களை புறக்கணித்து வருகின்றனர்.   டோக்ரா இனத்தவர் இனியும் அந்த அநீதியை பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்” என இந்த அமைப்பின் துவக்க விழாவில் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் லால்சிங் மீது தற்போது ஒரு பலாத்காரக் கொலைக் குற்றசாட்டு உள்ளது.  அதனால் லால்சிங் புதிய அமைப்பை சாதிய ரீதியாக தொடங்கி உள்ளதாக ஒரு சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.    அதே நேரத்தில் தன் மீது சாதி நிழல் படியாமல் இருக்கவே அவருடைய அமைப்பு அனைத்து மக்களுக்காகவும் போரிடும் என ஒரு வார்த்தை சேர்த்துள்ளார் எனவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.