வீட்டில் கழிப்பறை கட்டாத அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை : அரசு அதிரடி

ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்தில் வீடுகளில் கழிப்பறை கட்டாத அரசு ஊழியரகளின் ஊதியத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது.

மத்திய அரசு தூய்மை இந்தியா என்னும் திட்டத்தை அறிவித்து நாடெங்கும் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்ட நடவடிகை எடுத்து வருகின்றது.   இதற்கு காஷ்மீர் மாநில அரசு ஆதரவு அளித்துள்ளது.   காஷ்மீரில் ஒரு சில மாவட்டங்கள் திறந்த வெளிக் கழிப்பறை இல்லாத மாவடங்கள் என மாநில அரசு அறிவித்துள்ளது.   மேலும் அனைத்து மாவட்டத்திலும் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை விரைவில் கழிப்பறைகள் கட்டி முடிக்க வேண்டும் என அரசு ஆணையிட்டுள்ளது.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஷ்த்வார் மாவட்டத்தில் கழிப்பறிகள் முழுவதும் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.   அதையொட்டி அங்கு அரசு சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது.   ஆய்வில் அரசு ஊழியர்கள் 616 பேர் தங்கள் வீடுகளில் கழிப்பறை கட்டாதது தெரிய வந்துள்ளது.   அதையொட்டி அந்த ஊழியர்கள் தங்கள் வீடுகளில் உடனடியாக கழிப்பறை கட்ட வேண்டும் எனவும்,  அதுவரை அவர்களின் மாத ஊதியம் நிறுத்தி வைக்கப்படுவதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது.