ஸ்ரீநகர்,

காஷ்மீரின்  டிரால் பகுதியில்  ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.  இந்த மோதலில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.

கடந்த ஆண்டு காஷ்மிரில் ஹிஸ்புல் முஜாயீதின் தளபதி புர்ஹான் வானி பாதுகாப்பு படை யினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதை தொடர்ந்து காஷ்மீர் மாநிலத்தில் அடிக்கடி போராட்டம், கல்வீச்சு, துப்பாக்கிசூடு போன்ற நிகழ்வுகள் தொடர்கதையாகி வருகின்றன.

இந்நிலையில் நேற்று புர்ஹான் வானியின் முக்கிய முக்கிய கூட்டாளியான சப்சர் அகமது என்ற பயங்கரவாதி அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ராணுவம் அந்தபகுதியை சுற்றி வளைத்தது.  அவருடன் மேலும் பல பயங்கரவாத குழுக்களின் முக்கிய தலைவர்கள் பதுங்கி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதன் காரணமாக பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அந்த பகுதி மக்களும் கல்வீச்சில் ஈடுபட்டதாக வும், பயங்கரவாதிகள் ஏராளமான ஆயுங்களை அந்த வீட்டில் பதுக்கி வைத்துள்ளனர் என்றும் இதன் காரணமாக கடுமையாக சண்டை நடைபெற்று வருவதாகவும் ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை தொடங்கிய துப்பாக்கிச் சண்டை இரவிலும் நீடித்தது. இந்த சண்டையில் பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக மேலும் பல பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருவதாகவும், அதன் காரணமாக அப்பகுதியில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும், துப்பாக்கி சண்டை தொடர்கிறது என்று கூறப்படுகிறது.