சில சில முன்னேற்றங்கள் – ஆனாலும் பதற்றம் தணியவில்லை காஷ்மீரில்..!

ஜம்மு: காஷ்மீரின் பல இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும், மக்களின் போக்குவரத்து அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், தொடர்ந்து 18வது நாளாக மொபைல் மற்றும் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், கடைவீதிகள் இன்னும் மூடப்பட்டுள்ளதாகவும் செய்திகள் உறுதிபடுத்துகின்றன.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; நிலைமை அமைதியாக உள்ளது. பள்ளத்தாக்கின் எந்தப் பகுதியிலும் எந்த அசம்பாவித சம்பவம் நடந்ததாகவும் தகவல் இல்லை. மக்களின் போக்குவரத்து பள்ளத்தாக்கு முழுவதும் அதிகரித்து வருகிறது.

பொதுப் போக்குவரத்து இன்னும் தொடங்கப்படவில்லை என்றாலும், மாவட்டங்களுக்கிடையிலான வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் சாலைகளில் ஓடுவதைக் காண முடிகிறது.

நடுநிலைப் பள்ளி அளவில் ஆசிரியர்கள் பணிக்கு வருவதும், அரசு அலுவலகங்களுக்கு ஊழியர்கள் வருவதும் அதிகரித்துள்ளது. அதேசமயம், பெரும்பாலான மாணாக்கர்கள் இன்னும் பள்ளிகளுக்கு வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.