லாகூர்:
காஷ்மீர் பிரச்சினையில் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்போம் என சீனா தெரிவித்து உள்ளது.
china-pak
பாகிஸ்தான் அமைச்சர்  ஷாபாசின் 65வது பிறந்த தினத்தினை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்த பாகிஸ்தானுக்கான சீன தூதர்  யூ இந்த தகவலை தெரிவித்து உள்ளார்.
 
பாகிஸ்தானுக்கு எதிராக வெளிநாடு எதுவும் செயல்பட்டால், நாங்கள்  பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிபோம் என்றும் காஷ்மீர் விவகாரத்தில் அந்நாட்டின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு அளிக்கின்றோம் என்றும் சீனா தெரிவித்துள்ளது.
லாகூர் நகரில் பாகிஸ்தானிற்கான சீன தூதர் யூ போரன், பஞ்சாப் முதல் மந்திரி ஷாபாஸ் ஷெரீப்பினை சந்தித்து பேசினார்.  அதன் பின்னர் அவர் இத்தகவலினை தெரிவித்துள்ளார் என தி டான் செய்தி நிறுவனம் தகவல் அளித்துள்ளது.
மேலும், காஷ்மீரின் தற்போதைய நிலை பற்றியும்  ஆலோசனை நடத்தியதாகவும்,  சீனா மற்றும் பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சிக்கான (சி.பி.ஈ.சி.) பல்வேறு திட்டங்களின் வளர்ச்சி பற்றியும் பேசியுள்ளதாகவும் அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.