காஷ்மீர்: பிடிபி-பாஜக கூட்டணி ஆட்சியால் நாட்டிற்கு இழப்பு….ராகுல்காந்தி

டில்லி:

காஷ்மீர் பிடிபி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. முதல்வர் மெஹபூபா பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலாகும் சூழல் நிலவுகிறது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘மக்கள் ஜனநாயக கட்சி, பா.ஜ.க. கூட்டணி தலைமையிலான சந்தர்ப்பவாத கூட்டணி அரசு தீரம்மிக்க ராணுவ வீரர்கள் உள்பட பலரை பலி கொடுத்து காஷ்மீரை தீயில் இட்டது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கடுமையான உழைப்பை வீணாக்கி, நாட்டுக்கு இழப்பையும் ஏற்படுத்தியது. ஜனாதிபதியின் தலைமையிலான கவர்னர் ஆட்சியிலும் இதன் சேதாரம் தொடரும்’’ என்று தெரிவித்துள்ளார்.