பிரிவினை வாத குழு தலைவர்கள்

ஸ்ரீநகர்

காஷ்மீர் பிரிவினை வாதிகள் குழுவான ஜாயிண்ட் ரெசிடன்ஸ் லீடர்ஷிப்  இந்தியா உடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ளது.

காஷ்மீரை பிரிக்கக் கோரும் ஹரியத் அமைப்புகள் ஜாயிண்ட் ரெசிடன்ஸ் லீடர்ஷிப் என்னும் பெயரில் ஒரு குழுவாக இணைந்துள்ளன.  இந்த பிரிவினை வாதத்துக்கு முடிவு கட்ட மத்திய அரசு கடும் முயற்சி எடுத்து வருகிறது.    சனிக்கிழமை அன்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த அமைப்புகளுக்கு பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கு ஜாயிண்ட் ரெசிடென்ஸ் லீடர்ஷிப் அளித்த பதிலில், “நாங்கள் இந்தியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார்.   எங்களுடன் பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் நேரடியாக பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.   அதிகாரிகள் மட்ட பேச்சு வார்த்தைகள் தேவை இல்லை.

அத்துடன் காஷ்மீர் மாநிலம் தற்போது ஒருங்கிணைந்த பகுதியாக இல்லை.  அதில் சில பகுதிகள் பாகிஸ்தான் வசம் உள்ளது.   தற்போது காஷ்மீர் மாநிலம் இந்தியா, பாகிஸ்தான்,  இந்த மண்ணின் மைந்தர்கள் என மூன்று பிரிவினரிடம் உள்ளது.  எனவே இவ்வாறு பேச்சு வாரத்தையின் போது பாகிஸ்தானையும் அழைப்பது சிறந்த முடிவாகும்” என தெரிவித்துள்ளது.