காஷ்மீர்: பாஜக அமைச்சர்கள் சிலர் ராஜினாமா?

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநில அரசில் இருந்து மேலும் சில பா.ஜ. அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் பிடிபி, பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. காதுவா பகுதியில் 8 வயது சிறுமி பலாத்கார கொலை செய்யப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இச்சம்பவ குற்றவாளிகளுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் பாஜக அமைச்சர்கள் 2 பேர் கலந்துகொண்டனர்.

இதற்கு முதல்வர் மெகபூபா முப்தி எதிர்ப்பு தெரிவத்ததை தொடர்ந்து 2 அமைச்சர்களும் ராஜினாமா செய்தனர். இந்நிலையில் தற்போது மேலும் சில பா.ஜ.க அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.