ராஜ்கோட்: காஷ்மீர், தாஜ்மஹால்..: ப.சிதம்பரம் அதிரடி பேச்சு

ப.சிதம்பரம்

ராஜ்கோட்:

காஷ்மீர், தாஜ்மஹால் புறக்கணிப்பு, அகமதுபட்டேல் ஆகிய விவகாரங்கள் குறித்து ப.சிதம்பரம் அதிரடி கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

முன்னாள் உள்துறை அமைச்சரும் காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவருமான ப.சிதம்பரம் குஜராத்தின் ராஜ்கோட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பல விவகாரங்கல் குறித்து அதிரடியான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர்

காஷ்மீர்: “நான் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது காஷ்மீர் மக்களிடம் பேசியிருக்கிறேன். சுதந்திரம் கேட்டு போராடும் பலர், தன்னாட்சி அதிகாரம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அது நியாயமான கோரிக்கைதான். இது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யலாம். அம்மாநிலத்தின் ந்தெந்த பகுதிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் அளிக்கலாம் என்பது பற்றி ஆலோசிக்கலாம்.

இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இருந்தாலும் 370 சட்டப்பிரிவின்படி அதிக உரிமைகளைக் கொண்ட பகுதியாக அது இருக்கும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.”

தாஜ்மகால்

 

தாஜ்மகால்: “உத்தரபிரதேசத்தில் ஆளும் பாஜக தாஜ்மஹால் குறித்து சர்ச்சை எழுப்புவது கண்டிக்கத்தக்கது. தாஜ்ஹாலைப் பற்றி  இப்படி தவறாகப் பேசுபவர்கள், வரலாறு தெரியாமல் இருப்பார்கள். அல்லது  இந்தியாவின் நாகரிகம் வளர்ந்த முறை பற்றிய புரிதல் இல்லாதவர்களாக இருப்பார்கள்.”

அகமது பட்டேல்

அகமது பட்டேல்: “காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரான அகமது படேலை பா.ஜ.கவினர் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புபடுத்தி பேசுவது தவறு.

அகமதுபட்டேல் நிர்வாகியாக இருக்கும் அறக்கட்டளை சார்பாக மருத்துவமனை ஒன்ற செயல்பட்டு வருகிறது. சமீபத்தில். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர் என்று ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் அந்த மருத்துவமனையில் மூன்று ஆண்டுகளுக்கு முன் பணியாற்றி இருக்கிறார்.

இதைவைத்து அகமதுபட்டேலை தீவிரவாதத்தடன் தொடர்புபடுத்தவதும், அவர் பதவி விலக வேண்டும் என்பதும்  வேடிக்கையாக உள்ளது.”

–    இவ்வாறு  ப.சிதம்பரம் அதிரடியாக கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.