எல்லைப்பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி – ராணுவ வீரர் ஒருவர் மரணம்

காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதில் ஏற்பட்ட சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்தியாவிற்குள் நுழைய முயன்ற தீவிரவாதிகளின் சதித்திட்டம் ராணுவ வீரர்களினால் முறியடிக்கப்பட்டது.

india

காஷ்மீர் மாநிலத்தின் டங்தார் செக்டர் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவ முயன்றதாக இந்திய பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எல்லைப்பகுதியில் பாதுகாப்பு படை வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடைபெற்றது. இதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் “ டங்தார் செக்டரில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாடு கோடு உள்ளது. அதன்வழியாக சில தீவிரவாதிகள் இந்தியாவிற்கு நுழைய முயற்சித்தனர். இதனையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் எல்லையிலே சண்டையிட்டு அவர்களின் முயற்சியை முறியடித்தனர். இந்த சண்டையில் எல்லை வீரர் ஒருவர் உயிரிழந்தார். அவரின் பெயர் செபாய் புஷ்பேந்திர சிங் “ என்று கூறினர்.

ஏன் தீவிரவாதிகளின் ஊடுருவல் நடைபெற்றது என இதுவரை புலப்படவில்லை. இந்நிலையில் உயிரிழந்த ராணுவ வீரருக்கு எல்லைப்பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நாளை சுதந்திர தினம் கொண்டாட உள்ள நிலையில் எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் இருக்கிறது. அவர்களின் முயற்சியை முறியடிக்கும் வகையில் இந்திய ராணுவ வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-