காஷ்மீர்: மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல்

ஜம்மு:

காஷ்மீர் மாநிலத்துக்குள் புகுந்த பயங்கரவாதிகள், மின்னணு தகவல் பறிமாற்ற வளாகத்துக்குள் புகுந்து தாக்குல் நடத்தினர்

காஷ்மீர் மாநிலம்  பாம்பூர் நகரில் உள்ள மின்னணு தகவல் பரிமாற்ற வளாகத்தில் புகுந்த பயங்கரவாதிகள், தாக்குதலில் ஈடுப்பட்டனர்.  இதற்கு பதிலடி தரும் விதமாக ராணுவத்தினர் கடும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

8_top_banner_g0g4w8

இந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த ஒரு வீரர் காயம் அடைந்தார்.

மூன்று பயங்கரவாதிகள்  அந்த மின்னணு வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.  ஆற்றுப் பகுதி வழியாக பயங்கரவாதிகள் புகுந்திருக்கலாம் என்று பாதுகாப்பு படையினர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய ராணுவம் புகுந்து பயங்கரவாதிகளின் முகாம்களை தாக்கிய பிறகு, பயங்கரவாதிகளின் தாக்குதல் குறையும் என்று சொல்லப்பட்டது. ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி