சென்னை: 

நாட்டின் 100-வது சுதந்திர தினத்தின்போது,  காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது வைகோ கூறினார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி பொதுமக்களின் அதிருப்தியை பெற்று வருவதில் முதன்மையாக இருந்து வருபவர் மதிமுக பொதுச்செயலாளரான வாய்ச்சொல் வீரர் வைகோ.

ஏற்கனவே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட போது, தனக்கு மேலும் பல ஆண்டுகள் தண்டனை தாருங்கள் என்று வீராவேசமாக பேசிவிட்டு, உடனே முன்ஜாமின் பெற்றும், உயர்நீதி மன்றம் சென்று ஓராண்டு சிறை தண்டனைக்கு தடை பெற்றதும் அவர்மீதான மதிப்பு பொதுமக்களிடையே குறையத் தொடங்கியது.

அதுபோல,  எம்பியாக பதவி ஏற்றதும், இதுநாள் வரை கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்த பிரதமர் மோடி, அமித்ஷா, சுப்பிரமணியசாமி போன்றோரை சந்தித்து பேசியதும், அவரது கட்சியின் வெற்றிக்கு உதவிய காங்கிரஸ் தலைவர்களை சந்திக்காமல் புறக்கணித்ததும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்,  சமீபத்தில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடர்பாக கருத்து தெரிவித்த போதும், பாஜகவை ஒப்புக்கு சப்பாக விமர்சித்து விட்டு, காங்கிரஸ் கட்சியை மட்டுமே கடுமையாக சாடினார். இது தமிழக காங்கிரசாரிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், வைகோ ஒரு பஞ்சோந்தி என்று கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இந்த நிலையில், செனனை நந்தனத்தில் செப்டம்பர் 15ம் தேதி மதிமுக சார்பில் நடைபெற உள்ள அண்ணாவின் 111-வது பிறந்தநாள் மாநாட்டு அரங்கை பார்வையிட்டவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தான்  கொளுத்தும் வெயிலில் காலணி இல்லாமல்தான் இன்று அண்ணாவின் நினைவிடத்துக்கு சென்றேன். அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மலர்களைத் தூவி கல்லறையை தொட்டு வணங்கினேன். அப்போது நான் உயிர் பிரியும் முன் தமிழீழம் அமைய வேண்டும். அதற்கான வலிமையை தாருங்கள் என்று அண்ணாவிடம் பிரார்த்தனை செய்துவிட்டு இங்கு வந்திருக்கிறேன்  என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  நான் காஷ்மீர் பிரச்னையில் 30 சதவீதம் காங்கிரசையும், 70 சதவீதம் பாஜகவையும் தாக்கி பேசி இருக்கிறேன் என்று காங்கிரசார் விமர்சனத்துக்கு பதில் அளித்தார்.

அப்போது செய்தியாளர்கள் வைகோவிடம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உங்களை எட்டப்பன் என்று மறைமுகமாக விமர்சித்துள்ளாரே? என்று நிருபர்கள் கேட்டதற்கு, வைகோ பதில் எதுவும் கூற மறுத்து விட்டார்.

மேலும்,  பாஜகவின் தற்போதைய காஷ்மீர்  நடவடிக்கை காரணமாக,  இந்தியா தனது 100 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிற போது, காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்காது  என்றும், இதைத்தான வரலாறு எழுதப் போகிறது. புதை மணலில் இந்தியாவை கொண்டு போய் சிக்க வைத்து விட்டார்கள்.

இவ்வாறு வைகோ கூறினார்.