காஷ்மீர்: பயங்கரவாத இயக்கத்தில் இணைந்த ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர்

ஸ்ரீநகர்:

காஷ்மீர் சோபியான் மாவட்ட ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரர் ஷம்சுல் ஹக் மே மாதம் காணாமல் போனார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் அவர் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பில் இணைந்து துப்பாக்கி ஏந்திய புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகியுள்ளது.

அவர் மே 22-ம் தேதி அந்த அமைப்பில் இணைந்துள்ளதாக புகைப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.புகைப்படம் உண்மைதானா? என்பதை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.