காஷ்மீரில் ராணுவத்தினரின் என்கவுண்டருக்கு ஜாகீர் மூஸா உதவியாளர் உள்பட 6 பேர் பலி

காஷ்மீர்:

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் ராணுவத்தினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடை பெற்ற துப்பாக்கி சூட்டில், 6 பயங்கரவாதிகள்  சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களில் ஒருவர் காஷ்மீர் மாநில அல்கொய்தா தலைவர் ஜாகீர் மூஸாவின் உதவியாளர் என்பது தெரிய வந்துள்ளது.

காஷ்மீரின்  புல்வாமா மாவட்டம் டிரால் அருகே பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள  அரம்போரா கிராமத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

இதையறிந்த பயங்கரவாதிகள், அங்கிருந்து தப்பிக்கும் நோக்கில், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதன் காரணமாக பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சூடு நடைபெற்றது.

இதில், 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள், ஏராளமான வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன. கொல்லப்பட்ட 6 பேரில் ஒருவர் காஷ்மீர் மாநில அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவன் மூஷாவின் உதவியாளர் என தெரிய வந்துள்ளது.

கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.