நயன்தாராவுக்கு என தனி போஸ்டர்..? காஷ்மோரா ஸ்பெஷல்

--

cud2perusaakf3a

பொதுவாக இந்திய சினிமாவை பொறுத்தவரை நடிகை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தை தவிர வேறு எந்த திரைப்படத்திலும் நடிகைக்கு என தனி போஸ்டர்கள் வெளியிடப்படாது. ஆனால் இந்த சம்பரதாயம் ஒருவருக்கு மட்டும் தான் கிடையாது அது நம்ம லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவுக்கு தான்.

இவர் எந்த திரைப்படத்தில் நடித்தாலும் அந்த திரைப்படம் ஹிட் அடித்துவிடுகின்றது, இதனால் மளமள‌வென இவரின் சம்பள‌த்தை உயர்த்தினார், இவருக்கு என தனி போஸ்டர் “நானும் ரவுடிதான்” திரைப்படத்தின் தெலுங்கு ரிலீசில் தான் வெளியிடப்படது. தற்போது இவர் நடிகர் கார்த்தியுடன் நடித்து வரும் காஷ்மோரா திரைப்படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது. இதில் நயன்தாராவுக்கென‌ தனி போஸ்டரும் அதில் அவர் நடிக்கும் கதாப்பாத்திரத்தின் பெயரும் வெளியிடப்பட்டது.

“ரத்தின மஹா தேவி” இது தான் நயன்தாராவின் காஷ்மோரா திரைப்படத்தில் நடிக்கும் கதாப்பாத்திரத்தின் பெயர். நயனின் இந்த படமும் ஹிட்டானால் சம்பள‌த்தை உயர்த்த யோசிச்சாலும் ஆச்சரியம் இல்லை…