தாத்தாக்கள் மட்டும் நாயகர்களாக நடிக்கலாமா?: கஸ்தூரி கேள்வி

கஸ்தூரி – ரஜினி

“தாத்தாக்கள் நாயகர்களாக நடிக்கலாம். திருமணமான இளம்பெண்கள் நாயகியாக நடிக்கக்கூடாதா” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யா –  நடிகை சமந்தா திருமணம் கோவாவில் நடந்து முடிந்திருக்கிறது. திருமண ஒளிப்படங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்துவருகிறார்கள்.

இந்த நிலையில், “திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடிப்பேன்” என்று சமந்தா தெரிவித்தார்.

இதைக் குறிப்பிட்டு நடிகை கஸ்தூரி, “திருமணத்துக்குப் பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று சமந்தா அறிவித்து இருக்கிறார். அது என்ன? நாகசைதன்யாவை இந்த கேள்வி ஏன் யாரும் கேட்கவில்லை” என்று  தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கஸ்தூரி ட்விட்

இந்த பதிவுக்கு பின்னூட்டமிட்டவர்கள், “உங்களுடன் கூட நடித்த ரஜினியும் கமலும் இன்னும் நாயகனாக நடிக்கிறார்கள். உங்களால் முடியவில்லை அல்லவா… . அந்த காரணம் தான்” என்று குறிப்பிட்டார்கள்.

இதற்கு கஸ்தூரி, “ஆனால் ஏன்? அதுதான் என் கேள்வி. தாத்தாக்கள் நாயகர்களாக நடிப்பதை ஒப்புக்கொள்ளும் நாம், இளம் பெண்கள் திருமணம் ஆனதும் (நாயகிகளாக) ஒப்புக்கொள்வதில்லை? ஏன்? ஏன்? ஏன்?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இப்பதிலுக்கு பலரும் கேள்வி எழுப்பவே, அதற்கு “மனைவியின் காதல், கணவரின் தொழில் வாழ்வை பாதிக்குமா? ஏற்றத்தாழ்வுகளைக் காண முடிகிறதா? எதுவோ தவறாக உள்ளது. உண்மையில், பெண்கள் தங்கள் கணவர்களின்மேல் அவ்வளவு பிரியமாக இல்லை என்று நினைக்கிறேன். பல பெண்களுக்கு வேறு வழியில்லை என்று கருதுகிறேன்.  ஒரு மகளாகவோ, மனைவியாகவோ பெண்கள் சுதந்திரமாக இல்லை” என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார் நடிகை கஸ்தூரி.

Leave a Reply

Your email address will not be published.