மண்டை காயுது கமல்!: நொந்துபோன கஸ்தூரி

 

சென்னை: நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் பதிவுகள் புரியாமல் பலரும் குழம்பி வரும் நிலையில், வெளிப்படையாக, “அய்யோ.. மண்டை காயுது கமல்” என்று ட்விட் செய்திருக்கிறார் நடிகை கஸ்தூரி.

“அரசியலுக்கு வந்தா வருவேன்.. வரும்போது சொல்வேன்” என்றெல்லாம் குழப்படியாக பேசி வரும் ரஜினியையும் அவரது ரசிகர்களையும் கண்டபடி கலாய்த்துவந்தார் கஸ்தூரி. இந்த நிலையில் கஸ்லூதூரியை தனது வீட்டுக்கு அழைத்து அரசியல் ஆலோசனை நடத்தினார் ரஜினி.

இதற்கிடையே கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து எதிர்ப்புகள் கிளம்பின. கமல்ஹாசன் உட்பட அந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் சிலர் கூறினர்.

இதற்க கஸ்தூரி, “அந் நிழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்கள் 100 நாட்கள் வீட்டுக் காவலில்தான் இருக்கிறார்கள். . அவர்களை ஏன் கைது செய்ய வேண்டும்.?  முதலில் கலாசார பயங்கரவாதிகளிடம் இருந்துதான் தமிழ்க் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும். இந்து மதம் உங்கள் தனிப்பட்ட சொத்து அல்ல… வேலி போட்டு பாதுகாக்க” என்று ட்விட்டினார்.

இந்நிலையில் கமல்ஹாசன் டிவிட்டரில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார். கவிதை போல தோன்றினாலும் அதன் அர்த்தம் எவருக்கும் விளங்குவதில்லை.

இந்த நிலையில், நாளை (இன்று) தனது கருத்துகளை புரியும்படி விளக்கப்போவதாக கமல் நேற்று ட்விட்டினார். அதிலும் ஏதேதோ வார்த்தைகளை எழுதி குழப்பியிருந்தார்.

இதற்கு கஸ்தூரி,  “அய்யோ மண்டை காயுதே.. இது ஒரு புதிராக உள்ளதே”  என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கஸ்தூரிக்கு மட்டுமா மண்டை காயுது?