ரஜினி, கமலைத் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவு!: நடிகை கஸ்தூரி ட்விட்

சென்னை

டிகை கஸ்தூரி விஜய்க்கு ஆதரவாக டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

சமீப காலங்களாக அரசியல் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பல கருத்துக்களை நடிகை கஸ்தூரி தெரிவித்து வருகிறார்.  ரஜனிகாந்த் அரசியலுக்கு வருகிறார் என செய்தி வந்ததும் தனது ஆதரவை ரஜினிகாந்துக்கு தெரிவித்தார்.  பிறகு கமலஹாசனின் அரசியல் பிரவேசம் பற்றி அவர் தெரிவித்த கருத்துக்களையும், அரவிந்த் கெஜ்ரிவால் கமலுடன் நிகழ்ட்திய சந்திப்பையும் பற்றியும் கருத்து தெரிவித்தார்.  தனது டிவிட்டர் பக்கத்தில், “கமல், கெஜ்ரிவால் இருவருமே ஊழலை எதிர்ப்பவர்கள்.  கமலிடம் இருந்து விரைவில் பெரிய அறிவிப்பு வரும்” என பதிந்தார்.

அது மட்டுமின்றி பிக்பாஸ் பற்றிய சர்ச்சைகளில் கமலுக்கு ஆதரவாகவே கஸ்தூரி கருத்துக்கள் தெரிவித்து வந்துள்ளார்.  தற்போது விஜய்க்கு ஆதரவாக கஸ்தூரி ஒரு டிவிட்டர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “கமலஹாசன் எட்டு அடி பாய்ந்தால் விஜய் நாற்பத்து எட்டு அடி பாய்வார்” என புகழ்ந்துள்ளார்.  இதனால் விஜய் ரசிகர்கள் அவருக்கு நன்றி மழையை பெய்து வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி