ஊராட்சிக்கோட்டை கதவணை ஷட்டர் சேதம்: மின் உற்பத்தி பாதிப்பு

--

ஊராட்சிக்கோட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை ஷட்டரில் சேதம் ஏற்பட்டுள்ளதால், தற்காலிகமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஊராட்சிக்கோட்டையில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கதவணை ஷட்டரில் திடீரென அதிகாலை சேதம் ஏற்பட்டது. கதவணை மின் உற்பத்தி நிலையத்தின் முதல் ஷட்டரில் ஏற்பட்டுள்ள இச்சேதத்தால், தற்காலிகமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்துள்ள ஷட்டரை சரி செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்களும், பொதுப்பணித்துறை ஊழியர்களும் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.