வேலூர்:

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்ற நிலையில், அவரது வெற்றி  ஸ்டாலின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி என்று திமுக பொருளாளரும், கதிர் ஆனந்தின் தந்தையுமான  துரைமுருகன் கூறி உள்ளார்.

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த  நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்  வெற்றி பெற்றார்.  இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்த மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலுருமான சண்முகசுந்தரம், கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக  சான்றிதழை வழங்கினார்.

வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை …

அதிமுக  – ஏ.சி.சண்முகம்  – 4,77,199 வாக்குகள்

திமுக  – கதிர் ஆனந்த் –  4,84,980 வாக்குகள்  – வெற்றி

நாம் தமிழர்   – தீப லட்சுமி – 26,995 வாக்குகள்.

வேலூர் மக்களவை தொகுதி தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்ற நிலையில், அவரது வெற்றி குறித்து அவரது தந்தை துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, கதிர்ஆனந்தின்   ஸ்டாலின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளமாகவே இந்த  வெற்றியை பார்க்கிறேன் என்றவர், திமுகவுக்கு  சிறுபான்மையினர் ஆதரவு எப்போதுமே உண்டு என்று கூறியவர் எந்தவொரு வெற்றியையும் சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது என்றார்.