த்துவா

காஷ்மீர் மாநிலம் கத்துவா சிறுமி பலாத்கார கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் தங்களை உண்மைக் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஷ்மிர் மாநிலம் கத்துவா பகுதியில் ஒரு எட்டு வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.  இந்த வழக்கில் எட்டு பேர் குற்றவாளிகளாக கருதி கைது செய்யப்பட்டுள்ளனர்.   இந்தக் குற்றத்தை வடிவமைத்தவர் எனக் கூறப்படும் சஞ்ஜிராம், மற்றும் ஒரு சிறுவன் உட்பட அனைவரும் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப் பட்டனர்.

இந்த வழக்கின் முக்கிய சாட்சியங்களை அழித்ததாக காவல்துறை அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.     கைது செய்யப்பட்ட எட்டு பேரில் சிறுவன் ஜாமீனுக்கு  விண்ணப்பம் செய்துள்ளார். நேற்று நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டோர் தாங்கள் குற்றம் புரிய வில்லை என தெரிவித்துள்ளனர்.    மேலும் இது குறித்து தங்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழக்கு விசாரணையை வரும் 28ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.    இந்த வழக்கு விசாரணை நடைபெற்றா அதே நேரத்தில் நீதிமன்றத்துக்கு வெளியே கைது செய்யப்பட்ட சஞ்ஜிராமின் மகள் மது ஷர்மா இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத் தக்கது.