கத்துவா சிறுமி வன்கொடுமை கொலை: 6 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!

பதான்கோட்:

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கத்துவா சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில்  6 பேர் குற்றவாளிகள் என பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது. அவர்களுக்கு இன்று பிற்பகல் 2 மணிக்கு தண்டனை  அறிவிக்கப்படும் என கூறி உள்ளது.

கடந்தஆண்டு (2018)  ஜம்மு காஷ்மீர் மாநிலம் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த சிறுமியை சில மர்ம நபர்கள் தூக்கிச்சென்று அங்குள்ள கோயிலுக்குள் அடைத்து வைத்து,  மயக்க மருந்து கொடுத்து  தொடர்ந்து 4 நாட்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதன் காரணமாக இறந்த அந்த சிறுமியின் உடலை சிதைத்து அங்குள்ள காட்டுப்பகுதியில் புதைத்தனர்.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பைக ஏற்படுத்திய நிலையில், இந்த கொடூர சம்பவம் தொடர்பாக அந்த பகுதியை சேர்ந்த காவல்துறை அதிகாரி தீபக் கஜூரியா மற்றும் பர்வத குமார் மற்றும் கோவிலின் பிரதான பூசாரி சாஞ்சி ராம் ஆகியோர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

பெரும் பரபரப்புடன் நடைபெற்று வந்த வழக்கில்,  கடந்த ஆண்டு (2018)  ஏப்ரல் 9ம் தேதி ஜம்மு காஷ்மீர் கிரைம் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.  தொடர்ந்து காரசார விவாதங் களுடன் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை கடந்த வாரம் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் பஞ்சாப் பதான்கோட் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பில், சிறுமி கொலை வழக்கில் சஞ்சய் ராம், விஷால், தீபக், சுரேந்தர் உட்பட 6 பேர் குற்ற வாளிகள் என இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் மேலே கூறப்பட்ட மூன்று குற்றவாளி களும், ஆனந்த தத்தா, திலக் ராஜ் மற்றும் சுரிந்தர் ஆகியோர் ரன்பீர் குற்றவியல் கோர்ட்டின் கீழ் தண்டனை பெற்றனர்.

கடத்தல்காரர்கள், கற்பழிப்பு மற்றும் பலர் மத்தியில் சாட்சியங்கள் அழிக்கப்படுபவர்களுடன் தொடர்புடைய ஆறு பிரிவுகளின் கீழ் ஆறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இவர்களுக்கான தண்டனை விவரம் இன்று பிற்பகல் வழங்கப்பட உள்ளது.

இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதையொட்டி குற்றவாளிகள் பலத்த பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர்.   தீர்ப்பு காரணமாக, பதான்கோட் நீதிமன்ற வளாகத்தில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.