டெல்லி: டெல்லி டூ காஷ்மீர் மாநிலம் காட்ரா வரை செல்லும் எக்ஸ்பிரஸ் சாலை 2023-க்குள் முடிவடையும் என்று கூறிய மத்தியஅமைச்சர் ஜிதேந்திர சிங் அதற்கான நிலம் கையப்படுத்தும் பணி முடிவடைந்து விட்டதாகவும் கூறினார்.

காஷ்மீர் மாநிலத்தின் காட்ராவையும், தலைநகர் டெல்லியையும் இணைக்கும்  எக்ஸ்பிரஸ் சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 35ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த சாலை அமைக்கும் பணிகள் வரும் 2023ம் ஆண்டுக்குள் முடிவடையும் என்றும், இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து விட்டதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்து உள்ளார்.

இந்த சாலையானது ஜம்மு காஷ்மீர் கட்ரா பகுதியில் இருந்து ஜலந்தர், அமிர்தசரஸ், கபூர்தலா, லுதியலானா, பஞ்சாப் வழியாக டெல்லி சென்றடைகிறது.  தற்கான பணி கத்ராவில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இந்த சாலை செயல்பாட்டு வந்தால், சுமார் 6 மணி நேரத்தில் டெல்லியில் இருந்து காஷ்மீர் மாநிலத்திற்கு சாலைமார்க்கமாக சென்றடைய முடியும் என்றும் தெரிவித்தார்.

மேலும், தற்போது, மக்கள் விமானம் அல்லது ரயில் மூலம் காஷ்மீர் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சாலை தயாரானதும்,  மக்கள் சாலை வழியாக எளிதில் டெல்லிக்கு செல்ல விரும்புவார்கள். என்றும், இந்த  சாலையின்  தனிச்சிறப்பு என்னவென்றால், இது புனித நகரங்களான கத்ரா மற்றும் அமிர்தசரஸை இணைக்கும் என்றார்.

அதே நேரத்தில் பதன்கோட் மற்றும் ஜம்மு இடையிலான  4 வழிப் தேசிய நெடுஞ்சாலையை 6 வழிப் பாதையாகமாற்றும் பணிகளும் நடைபெற்று வருகிறது என்றும் கூறினார்.