விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் கத்ரீனா கைஃப்…..!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அடுத்ததாக பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.

ஆயுஷ்மான் குரானாவை வைத்து அந்தாதுன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் தன் அடுத்த பட வேலையை துவங்கிவிட்டார்.

விஜய் சேதுபதியை ஹீரோவாக வைத்து படம் எடுக்கவிருக்கிறார். அந்த படத்தில் கத்ரீனா கைஃப் தான் விஜய் சேதுபதிக்கு ஜோடியாம்.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.