கொரோனா பரிசோதனையை எதிர்கொள்ளும் நடிகை கத்ரீனா கைப்….!

கொரோனா தோற்று பரவல் காரணமாக கடந்த சில மாதங்களாக படப்பிடிப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சமீபத்தில் படப்பிடிப்பை தொடங்க அனுமதி வழங்கியதை அடுத்து படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நடிகர், நடிகைகள் உட்பட அனைவரும் படப்பிடிப்பிற்கு முன் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா இரு தினங்களுக்கு முன் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்ட வீடியோவை கத்ரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் அவரது மூக்கில் கொரோனா பரிசோதனை செய்த போது முதலில் பயந்த கத்ரீனா,அதன் பின் சிரித்து கொண்டே அதனை எதிர்கொள்கிறார்.