பிப்ரவரியில் வெளியாகவிருக்கும் ‘கட்டப்பாவ காணோம்’

போக்கிரி ராஜா படத்தைத் தொடர்ந்து சிபி ராஜ் நடிக்கும் படம் ‘கட்டப்பாவ காணோம்’. இப்படத்தின் கதாநாயகியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். இயக்குனர் அறிவழகனிடம் இணை இயக்குனாராக பணியாற்றிய மணி இப்படத்தை இயக்குகிறார். மேலும் இப்படத்தில் காளிவெங்கட், யோகிபாபு உட்பட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தில் ஒரு வாஸ்து மீன் பெயர்தான் கட்டப்பா. அந்த மீன் காணாமல் போய்விடுகிறது. சிபிராஜ் காணாமல் போன அந்த மீனை கண்டுபிடிப்பது தான் கதை.

இப்படத்தை டிசம்பர் மாதமே வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் சில காரணங்களால் பிப்ரவரி மாதம் ரிலீஸாக இருக்கிறது.

கார்ட்டூன் கேலரி