கடந்த ஜூலை 10-ம் தேதி ‘பாகுபலி’ வெளியாகி 5 ஆண்டுகளை நிறைவு செய்தது. இதனைப் படக்குழுவினர், ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி மகிழ்ந்தார்கள்.
5 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு, ‘பாகுபலி’ படத்தின் கதாசிரியரும், ராஜமெளலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் இந்த கதை பிரபாஸுக்காகவே எழுதப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
“அந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் அனைத்துமே யாரெல்லாம் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எழுதினோமோ அவர்களே நடித்தார்கள். ‘கட்டப்பா’ கதாபாத்திரத்துக்கு மட்டும் முதலில் சஞ்சய் தத் தான் எங்களுடைய தேர்வாக இருந்தது. ஆனால், அவர் ஜெயிலில் இருந்ததால்தான் சத்யராஜைத் தேர்வு செய்து நடிக்க வைத்தோம்” என்று தெரிவித்துள்ளார் விஜயேந்திர பிரசாத்.