ஞானவேல்ராஜ்-ன் ‘காட்டேரி’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு…..!

ஞானவேல்ராஜா தயாரிப்பில் இயக்குநர் டிகே இயக்கத்தில் உருவான படம் ‘காட்டேரி’.

இந்தப் படத்தில் வைபவ், ஆத்மிகா, பொன்னம்பலம், கருணாகரன், சோனம் பாஜ்வா ஆகியோருடன் முக்கியக் கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.

பைனான்ஸ் பிரச்சினையால் ‘காட்டேரி’ படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.

தற்போது பைனான்ஸ் பிரச்சினை அனைத்தையும் தீர்த்துவிட்டார் ஞானவேல்ராஜ். இதனால் ‘அருவா’ படத்தையும் அறிவித்துள்ளார். இந்தத் தீர்வால் ‘காட்டேரி’ஏப்ரல் 17-ம் தேதி படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.