வைபவ்-ன் ‘காட்டேரி’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி….!

ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘காட்டேரி’. இப்படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி கோபி உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.

காமெடி கலந்த திகில், திரில்லர் படமாக இயக்குனர் டீகே உருவாக்கி இருக்கிறார். விக்கி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு எஸ்.என்.பிரசாத் இசையமைத்திருக்கிறார்.

டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் வெளியீடாக ‘காட்டேரி’ திரையரங்குகளில் வெளியாகும் என்று ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டனர்.

இந்நிலையில் தற்போது படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. இயக்குனர் வெங்கட் பிரபு இதை வெளியிட்டுள்ளார். திகில் மற்றும் நகைச்சுவை கலந்த இந்த ஸ்னீக் பீக் காட்சி பார்வையாளர்களை கவர்ந்து வருகிறது.