‘கட்டிபுடி கட்டிபுடிடா…..’ 4 மணி நேரத்தில் 6 முறை டிரம்பை கட்டித்தழுவிய மோடி….

ந்தியா வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்பை நமது பிரதமர் மோடி கட்டிப்புடி வைத்தியம் மூலம் அவ்வப்போது கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தி வருகிறார்…

நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற சுமார் 4 மணி நேர நிகழ்ச்சியில் 6 முறை டிரம்பை மோடி கட்டிப்பிடித்து அன்பை பரிமாறிக்கொண்டார்.

மோடியின் கட்டிப்புடி வைத்தியத்துக்கு சில நாடுகள் வரவேற்பு தெரிவித்து வருகின்றன. இருந்தாலும், சமுக வலைதளங்களில் வரவேற்பையும், மற்றொருபுறம் விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது….

அகமதாபாத் விமான நிலையம் வந்த டிரம்பை விமான நிலையத்தில் மோடி கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தினார்…

பின்னர் அகமதாபாத் ஸ்டேடியத்தில் நடைபெற்ற நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியின்போதும் டிரம்பை மீண்டும் மோடி கட்டியணைத்துக்கொண்டார்.

பிரதமர் மோடியை தனது அறிமுகக் கருத்துக்களைத் தெரிவிக்கும்படி அழைத்தபோது அவர்கள் மீண்டும் கட்டிப்பிடித்தனர்.

பின்னர், “நண்பர்களே, எனது நண்பர், இந்தியாவின் நண்பர், அமெரிக்காவின் ஜனாதிபதி திரு டொனால்ட் டிரம்ப்” என்று உங்கள் உரையை வழங்க மோடி அழைத்தபோது, ​​அவர்கள் மீண்டும் கட்டிப்பிடித்தனர்.

பிரதமர் மோடி மொட்டேரா மைதானத்தில் தனது உரையை முடித்த பின்னர் இருவரும் ஆறாவது முறையாக ஒருவரை ஒருவர் அரவணைத்துக் கொண்டனர்.

பொதுவாக உலகத்தலைவர்களை சந்திக்கும் பிரதமர் மோடி, அவர்களை கட்டித்தழுவி தனது அன்பை வெளிப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். 

இந்த நிலையில் இந்தியா வருகை தந்துள்ள டிரம்பை  நேற்று ஒரே நாளில் மட்டும் 6 தடவை கட்டியணைத்து, தனது கட்டிப்பிடி வைத்தியத்தை உலகநாடுகளுக்கு பறைசாற்றி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி