டில்லி,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல் உச்சநீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதையடுத்து அவர் உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார்.

சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட சஞ்சய் கிஷன் கவுல் (Sanjay Kishan Kaul)  ஜூலை 26, 2014 அன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார். இவர் அதற்கு முன்பு பஞ்சாப் மற்றும் அரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்தார்.

உச்சநீதி மன்ற நீதிபதியாக கவுல் பதவி உயர்வு பெற்றதை யடுத்து அவருக்கு பிரிவுபசார விழா சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது. அதையடுத்து டெல்லி சென்ற அவர் உச்சநீதி மன்ற நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

அவருடன் ராஜஸ்தான் உயர்நீதீமன்ற தலைமை நீதிபதி நவீன் சின்ஹா,  சத்தீஸ்கர் உயர்நீதீமன்ற தலைமை நீதிபதி தீபக் குப்தா, கேரள உயர்நீதீமன்ற தலைமை நீதிபதி மோகன் சந்தான கவுடர், கர்நாடக உயர்நீதீமன்ற தலைமை நீதிபதி அப்துல் நசீர் ஆகியோர் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி ஏற்றனர்.

தமிழக ஐகோர்ட்டுக்கு தலைமை நீதிபதியாக கர்நாடக ஐகோர்ட்டு தலைமைநீதி நியமிக்கப்பட்டுள்ளார்.

கவுல் ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்தபோது நடைபெற்ற வழக்கறிஞர்கள் போராட்டம்,  ஐகோர்ட்டுக்கு மத்திய படை  பாதுகாப்பு, பல வழக்குகளில்  அரசுக்கு கடும் எச்சரிக்கை போன்றவற்றில்  கவுலின் அதிரடி உத்தரவுகள் அனல் பறந்தது குறிப்பிடத்தக்கது.