‘ஐ டியூன்ஸில்’ தொடர்ந்து மூன்றாவது நாளாக முன்னிலை வகித்து வருகிறது ‘கவலை வேண்டாம்’ படத்தின் பாடல்கள்

unnamed-7

ஒரு திரைப்படத்தின் இதயமாக கருதப்படுவது அந்த படத்தின் பின்னணி இசையும், பாடல்களும் தான்… கிராமபோனில் ஆரம்பித்து, ஆடியோ கேசட், சி டி ஆகியவற்றின் மூலமாக திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களை சென்றடைந்தது…. தற்போது அவை அனைத்தையும் ஒன்று சேர்த்தார் போல் அமைந்திருப்பது தான் ஐ டியூன்ஸ் எனப்படும் பிரம்மாண்ட இசைத்தளம். இந்த தளத்தில் முதல் இடத்தை பிடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை….பலதரப்பட்ட இசை கலைஞர்கள் மத்தியில் நிலவி வரும் போட்டிதான் தான் அதற்கு காரணம்…. ஆனால் தற்போது அந்த முதல் இடத்தை தான் இசையமைத்த ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்தின் பாடல்கள் மூலம் பெற்று இருக்கிறார் இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். ‘ஆர் எஸ் இன்போடைன்மெண்ட்’ எல்ரெட் குமார் தயாரிப்பில், ஜீவா – காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த கவலை வேண்டாம் படத்தின் பாடல்கள் சமீபத்தில் ‘ஐ டியூன்ஸில்’ வெளியானது…. இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போது ஐ டியூன்ஸில்’ தொடர்ந்து மூன்றாவது நாளாக முன்னிலை வகித்து வருகின்றது.

“இந்தியா முழுவதும் கவலை வேண்டாம் படத்தின் பாடல்கள் ‘ஐ டியூன்ஸில்’ முதல் இடத்தை பிடித்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது….’ஐ டியூன்ஸில்’ என் பெயர் ஏதாவது ஒரு மூலையில் வராதா என்று நான் கண்ட பல நாள் கனவு, தற்போது இறைவனின் அருளால் நிறைவேறி உள்ளது. இசை பிரியர்களிடம் இருந்தும், ரசிகர்களிடம் இருந்தும் எனக்கு வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றது…. இனி நான் இசையமைக்க இருக்கும் ஒவ்வொரு பாடல்களையும் இன்னும் அதிகமாக மெருகேற்ற வேண்டும் என்ற எண்ணத்தை இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் என் நெஞ்சில் விதைத்திருக்கிறது…என்னுடைய இசையில் அடுத்து உருவாகும் வீரா திரைப்படத்திற்காக நான் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன்….” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: jeeva, kajalagarwal, kavalai vendam movie, kavalai vendam movie images, kavalai vendam movie photos, kavalai vendam movie pics, kavalai vendam movie pictures, kavalai vendam movie stills
-=-