சென்னை:

பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள KAVALAN Dial 100app என்ற மொபைல் செயலியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிமுகப்படுத்தினார்.

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொள்ளை, திருட்டு, செயின்பறிப்பு, கொலை போன்ற சம்பவங்களை தடுக்கும் விதத்தில், காவலன் டயல் 100 என்ற மொபைல் செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.

காவலன் டயல் 100 ( KAVALAN Dial 100) மற்றும் காவலன் எஸ்ஓஎஸ் (KAVALAN SOS)  என்ற இரண்டு செல்போன் செயலியை  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த செயலிகள் மூலம் மக்கள் நேரடியாக மாநில தகவல் தலைமை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.