[embedyt] https://www.youtube.com/watch?v=oePriUO4aos[/embedyt]

பி.ஆர். டாக்கீஸ் தயாரிப்பில் ஆர்.டி.எம். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ’காவல்துறை உங்கள் நண்பன்’. இப்படத்தில் சுரேஷ் நாயகனாகவும் ரவீனா ரவி நாயகியாகவும் நடித்துள்ளார்கள். மைம் கோபி முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். ஆதித்யா, சூர்யா இசையமைக்கும் இப்படத்திற்கு விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பெண்கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினையை மையமாகக் கொண்ட திரைப்படம் என கூறப்படுகிறது .

படத்திற்கு UA சான்றிதழ் பெற்ற நிலையில் படத்தின் ரிலீஸ் வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. ரிலீஸிற்கு முன்பே கிடைத்த மிகப்பெரும் அங்கீகாரமாக படத்தினை லிப்ரா புரடக்க்ஷன்ஸ் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது .