‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது …!

பிஆர் டாக்கிஸ் கார்ப்பரேசன் மற்றும் வைட் மூன் டாக்கிஸ் இணைந்து வழங்கும் படம் காவல்துறை உங்கள் நண்பன். ஜி தனஞ்செயன் இந்த படத்தை வெளியிடுகிறார்.

சுரேஷ் ரவி, ரவீனா ரவி, மைம் கோபி உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்துக்கு இசையமைத்துள்ளனர் ஆதித்யா மற்றும் சூர்யா. எடிட்டிங் – வடிவேல் மற்றும் விமல்ராஜ்.

வழக்கு ஒன்றுக்காக காவல் நிலையம் செல்லும் பொதுமக்களில் ஒருவரான கதையின் நாயகன், எவ்வாறு பாதிக்கப்படுகிறான். காவல்துறையின் அராஜகம் என்ன, அதிலிருந்து எப்படி மீள்கிறான், போராடுகிறான் என்பதை மையப்படுத்தி இந்த கதை உருவாகியுள்ளது. இது உண்மை கதை என படத்தின் ட்ரெய்லரிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.