சென்னை:

பிரபல கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் காலமானார். அவரது உடலுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

சென்னை அருகே பனையூரில் உள்ள வீட்டில் அப்துல் ரகுமான்  உடல்நலமில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை அவர் காலமானார்.

சாகித்ய அகாடமி விருது வென்ற கவிக்கோ அப்துல் ரகுமான், உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

80 வயதாகும் அவர் சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 2 மணியளவில் மூச்சு திணறலால் மரணமடைந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

1937ம் ஆண்டு நவம்பர் மாதம் 9ம் தேதி பிறந்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான்.

தமிழில் கவிதைக் குறியீடுகள் குறிந்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர்.

தமிழில் ஹைக்கூ, கஜல் ஆகிய பிறமொழி இலக்கியங்களை முனைந்ததிலும் பரப்பியதிலும் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார்.

80 வயதாகிய இவருக்கு . 1999-ம் வருடம் ‘ஆலாபனை’ கவிதைக்காக சாகித்ய அகாடமி விருது கிடைத்தது.

கலைஞருடன் அப்துல் ரகுமான்

அப்துல் ரகுமான், தி.மு.க ஆட்சி காலத்தில் வக்பு வாரியத் தலைவராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மறைந்த அப்துல் ரகுமான் உடலுக்கு திமுக செயல்தலைவர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த அப்துல் ரகுமான் உடலுக்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி இலக்கியவாதிகளும்  இரங்கல்கள் தெரிவித்தும், அஞ்சலி செலுத்தியும்  வருகிறார்கள்.

இந்த நிலையில், ரகுமானின் மகன் லண்டனில் இருந்து வர வேண்டியுள்ளதால்  அப்துல் ரகுமானின் இறுதிச் சடங்கு, பனையூரில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை)  நடைபெறும் என்று அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.