கவினின் ‘லிப்ட்’ படத்தின் ஆடியோ உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்….!

விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் மூலம் பிரபலமானவர் கவின். இதையடுத்து ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

இந்நிலையில் ஈகா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வினீத் இயக்கத்தில் உருவாகும் ‘லிப்ட்’ படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கிறார். இதில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார்.

இதனிடையே, இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் காயத்ரி ரெட்டி நடித்து வருவதாகப் படக்குழு அறிவித்துள்ளார். இவர் ‘பிகில்’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது நினைவுகூரத்தக்கது.

கொரோனா காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த படத்தின் ரிலீஸ் வேலைகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.