கவினின் ‘லிஃப்ட்’ படத்தில் சிவகார்த்திகேயன் பாடிய ‘இன்னா மயிலு’ பாடள் வெளியீடு….!

 

விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் மூலம் பிரபலமானவர் கவின். இதையடுத்து ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

இந்நிலையில் ஈகா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வினீத் இயக்கத்தில் உருவாகும் ‘லிப்ட்’ படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கிறார். இதில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார்.

த்ரில்லர் கதையம்சம் கொண்ட லிஃப்ட் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், டப்பிங் முடிவடைந்திருப்பதாக கவின் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகியிருக்கும் நிலையில் ‘இன்னா மயிலு’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

பிரிட்டோ மைக்கேல் இசையில் சிவகார்த்திகேயன், பூவையார் உள்ளிட்டோர் பாடியிருக்கும் இந்தப் பாடலை சென்னைத் தமிழில் எழுதியுள்ளார் நிஷாந்த். பாடல் வெளியான சில நிமிடங்களிலேயே 11 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ்களைப் பெற்றுள்ளது.