கவினின் ‘லிஃப்ட்’ படத்தின் உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்….!

விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ என்ற சீரியலில் மூலம் பிரபலமானவர் கவின். இதையடுத்து ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

இந்நிலையில் ஈகா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வினீத் இயக்கத்தில் உருவாகும் ‘லிஃப்ட்’ படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கிறார். இதில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார்.

லிஃப்ட் படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், டப்பிங் முடிவடைந்திருப்பதாக கவின் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

த்ரில்லர் கதையம்சம் கொண்ட இத்திரைப்படம் கொரோனா காரணமாக ரிலீஸ் தள்ளிப்போனது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது இந்த படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை முன்னணி தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.