கவின் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட இயக்குனர் வினித் பிரசாத்…!

சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின்.

பின் பிக் பாஸ் மூலமாக பலரின் மனசை கவர்ந்தவர் என கூறலாம் .

படிக்கும் போதே ஆர்.ஜே மற்றும் எஃப்எம் சேனல்களில் பணியாற்றினார். பின் குறும்படங்களில் நடிக்க தொடங்கினார் . குறும்படங்களின் மூலமாக தான் தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

மேலும், 2011 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” கனா காணும் காலங்கள்” என்ற சீரியல் மூலம் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கினார்.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் இவருக்கு 2015 ஆம் ஆண்டு ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் இன்று நேற்று நாளை, முடிசூடா மன்னன் ஆகிய படங்களில் கௌரவ வேடத்தில் கவின் நடித்து உள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவினுக்கு எக்கச்சக்க பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை தனது பட வாய்ப்புகள் குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வாய்ப்புகள் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இயக்குனர் வினித் பிரசாத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவின் நடித்து வரும் படத்தின் பாடல்களுக்கான பணிகள் தொடங்கி விட்டதாகவும் விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என்றும் குறிப்பிட்டு அதில் #தமிழ்மூவி #கோலிவுட் #கவின் என்ற அதில் டேகையும் பயன்படுத்தி இருக்கிறார்.