விஜய் டிவி ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் மூலம் பிரபலமானவர் கவின். இதையடுத்து ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.
இந்நிலையில் ஈகா என்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் வினீத் இயக்கத்தில் உருவாகும் ‘லிப்ட்’ படத்தில் நடிகர் கவின் நாயகனாக நடிக்கிறார். இதில் கவினுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார்.
த்ரில்லர் கதையம்சம் கொண்ட இத்திரைப்படம், திரையரங்குகள் திறந்த பின்னர் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.


கொரோனா ஊரடங்களினால் படத்தின் ரிலீஸ் தேதியில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் படக்குழுவினர் இன்னும் கொஞ்சம் படத்தை மெருகேற்றி வருகின்றனர். அந்தவகையில் இப்படத்திற்காக நடிகர் கவின் தீவிர நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து நடன பயிற்சியாளர் சதிஷ் ட்விட்டரில் கவினின் வித்யசமான தோற்றத்தையும் வெளியிட்டுள்ளார்.