ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீரின் புதிய துணை முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பா.ஜ.கவின் கவிந்தர் குப்தா பதவி ஏற்றார். அவருக்கு மாநில கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அத்துடன் மேலும் 7 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர்.

காஷ்மீரில் உள்ள கத்வா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்ட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் குற்றவாளிகள் என கூறப்படுவர்க ளுக்கு ஆதரவாக சில பா.ஜ.கவினர் பேரணியில் ஈடுபட்டனர். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஊர்வலத்தில் பங்கேற்ற அமைச்சர்கள் சவுத்ரி கலந்த், சந்தர் பிரகாஷ்சிங் ஆகியோர் ராஜினாமா செய்ய பாஜ மேலிடம் உத்தரவிட்டது. அதையடுத்து அவர்கள் பதவி விலகினர்.

இந்நிலையில்,  மாநிலத்தின் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் அம்மாநில துணை முதல்வர் மெகபூபா தெரிவித்திருந்தார். அதைத்தொடர்ந்து  துணை முதல்வராக இருந்த நிர்மல் சிங் நேற்று பதவி விலகினார்.

அதைத்தொடர்ந்து துணைமுதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட கவிந்தர் குப்தா, இன்று துணை முதல்வராக பதவி ஏற்றார்.

அவருடன், ஸ்ரீநகர் மாநில தலைவர் சத்பால் சர்மா, தேவேந்திரகுமார் மன்யால், தோடா சக்தி ராஜ் உள்பட 7 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர்.  அவர்களுடன் பிடிபி எம்எல்ஏ  மொஹமட் அஸ்ரஃப் மிர் அமைச்சராக பதவி ஏற்றார்.

இந்த பதவி ஏற்பு விழாவுககு பாரதியஜனதா பொதுச்செயலாளர் ராம் மாதவ், மற்றும் மாநிலங்களுக்கான மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.