தெலுங்கானா முதல்வர் மகள் கவிதா அமைச்சர் ஆகிறார்….

 

ஹைதராபாத் :

தெலுங்கானா மாநில முதல்-அமைச்சர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, தீவிர அரசியலில் ஈடுபட்டிருப்பவர் ஆவார்.  சமூக சேவையிலும் நாட்டம் உள்ளவர்.

2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் நிஜாமாபாத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. ஆனவர் கடந்த தேர்தலில் பா.ஜ.க. விடம் சுமார் 70 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.

இதனால் தந்தை சந்திரசேகர ராவ் , கொஞ்ச நாட்கள் அதிர்ச்சியில் உறைந்திருந்தார்.
இந்நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகள் வாக்களித்து தெலுங்கானா மேல்சபைக்கு எம்.எல்சி.யை தேர்வு செய்யும் தேர்தல் அண்மையில் நடைபெற்றது.

இந்த தேர்தலில் கவிதா போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இதனை யடுத்து ஐதராபாத்தில் நடந்த பதவி ஏற்பு விழாவில் அவர் எம்.எல்.சி.யாக பொறுப்பு ஏற்றுக்கொண்டார்.

விரைவில் அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ள கே. சந்திரசேகர ராவ், கவிதாவை அமைச்சராக்க முடிவு செய்துள்ளார்.

– பா.பாரதி