பல்சர் சுனிலா? அது யார்? : காவ்யா மாதவன்!

நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பல்சர் சுனிலை தனக்கு தெரியாது என காவ்யா மாதவன் கூறி உள்ளார்.

நமது அண்டை மாநிலமான கேரளாவில் நடிகை காரில் கடத்தப்பட்டு பலாத்காரம் செய்து அவரை ஆபாச புகைப்படம் எடுத்ததாக பல்சர் சுனில் மற்றும் அவர் கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர்.  இது தொடர்பாக நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.   பல்சர் சுனில் நடிகை பலாத்கார வீடியோ மற்றும் புகைப்படங்கள் அடங்கிய மெமரி கார்டை தான் நடிகர் திலீப்பின் தற்போதைய மனைவி ஆன காவியா மாதவனிடம் ஒப்படைத்ததாக போலீசில் தெரிவித்தார். மேலும் தான் காவியாவிடம் ஓட்டுனராக பணி புரிந்ததாகக் கூறினார்

இது குறித்து ஏடிஜிபி காவ்யாவிடம் விசாரணை செய்தார்.  அப்போது காவ்யா, பல்சர் சுனில் என்பவர் யாரெனவே தனக்கு தெரியாதென்றும், அவர் தன்னிடம் வேலை செய்ததாகச் சொல்வது பொய்யான தகவல் எனவும் கூறியதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

காவ்யாவிடம் மேலும் விசாரணை  நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது