சிறையில் நடிகர் திலீப்புடன் காவ்யா மாதவன் சந்திப்பு!

கொச்சி,

பாவனா பாலியல் தொல்லை – கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நடிகர் தீலிப்பை அவரது மனைவி காவ்யா மாதவன் சந்தித்து பேசினார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி பல்சர் சுனிலின் வாக்குமூலத்தை தொடர்ந்து காவ்யா மாதவன் கைது செய்யப்படலாம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது அவர் தனது கனவர் திலீப்பை சிறையில் சந்தித்து பேசி உள்ளார்.

நேற்று முன்தினம் கொச்சி சிறையில் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது காவ்யாவின் தந்தை மாதவன், திலீப்பின் மகள் மீனாட்சி. திலீப்பின் நெருங்கிய நண்பரும், இயக்குனருமான நாதிர்ஷா ஆகியோர் உடன் இருந்தனர்.

சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பின்போது  இருவரும் சில  நிமிடங்கள் எதுவும் பேசிக் கொள்ளாமல் அழுதபடியே இருந்ததாவும், மகள் மீனாட்சியை கட்டிப்பிடித்து திலீப் கதறியதாகவும், பின்னர் இருவரும் உரையாடியதாகவும் சிறைத்துறை வட்டாரங்கள்  தெரிவிக்கின்றன.

மலையாள நடிகை பாவனா கடத்தல், பாலியல் தொல்லை வழக்கில்  பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு கொச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  இது தொடர்பாக  பாவனாவின் முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனில் உள்பட  6 பேர் கைது செய்யப்பட்டனர். பல்சர் சுனிலிடம் நடைபெற்ற விசாரணையின்போது, அனைத்து வகையான குற்றங்களும் மேடம் சொன்னதின்பேரிலேயே செய்ததாக கூறியிருந்தார்.

இதன் காரணமாக காவ்யா மாதவன் கைது செய்யப்படலாம் என கூறிவந்த நிலையில், தற்போது அவர் தனது கணவர் திலீப்பை சிறையில் சந்தித்து சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கார்ட்டூன் கேலரி