திருவனந்தபுரம்:

நடிகை பாவனா கடத்தல் வழக்கில் தேடப்பட்டுவந்த நடிகை காவ்யா மாதவனை தற்போது காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும், அவர் இன்று கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் திலீப் கைது செய்யப்பட்டபோதே, அவரது மனைவி காவ்யாமாதவனையும் கைது செய்ய காவல்துறையினர் தீர்மானித்திருந்தனர். ஆனால் திலீப் கைது செய்யப்படும் முன்பே, காவ்யா, தனது தாயாருடன் தலைமைறைவாகிவிட்டார்.

இந்த நிலையில் பாவனா பலாத்கார வழக்கில் காவ்யாவுக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் காவல்துறை வசம் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவ்யாவையும் அவரது தாயாரையும் காவல்துறையினர் ரகசியமாக தேடி வந்தனர். இந்த நிலையில் அவர்களது செல்போன் பேச்சு மூலம், நேற்று முன்தினம் அவர்கள் இருக்கும் இடத்தை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து இருவரையும் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்றும் தவறும்பட்சத்தில் கைது செய்ய நேரிடும் என்றும் தகவல் அனுப்பினர். அதன்படி காவ்யா மாதவன், தனது தாயார் சியாமளாவுடன் காவல்துறையினர் கூறிய ரகசிய இடத்திற்கு வந்தார்.

இருவரிடமும் சுமார் நான்கு மணி நேரம் காவல்துறையினர் விசாரணை செய்தனர். கேரள டிஜிபி லோக்நாத் பெகராவும் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. விசாரணையில் இருவரும் சில முக்கிய தகவல்களை கூறியதாக தெரிகிறது.

பாவனாவைக் கடத்திய முக்கிய குற்றவாளியான பல்சர் சுனிதான் காவ்யா மாதவனுக்கு எதிரான ஆதாரங்களை காவல்துறையினருக்கு தெரிவித்ததாகக் ஒரு பேச்சு உலவுகிறது. மீண்டும் காவ்யாவிடம் காவல்துறயினர் விசாரணை நடத்த இருப்தாகவு், விசாரணைக்குப் பிறகு அவரை நாளை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவார்கள் என்றும் கூறப்படுகிறது.